தமிழகத்தில் சுபமுகூர்த்தம் மற்றும் வார விடுமுறை சிறப்பு பேருந்துக்கள் இயக்கம்.

by Editor / 15-05-2024 12:20:08am
தமிழகத்தில் சுபமுகூர்த்தம் மற்றும் வார விடுமுறை சிறப்பு பேருந்துக்கள் இயக்கம்.

தமிழகத்தில் வைகாசி சுபமுகூர்த்தம் மற்றும் வார விடுமுறை இறுதி நாட்களை முன்னிட்டும்,கூடை விடுமுறைக்காலம் முடியும் தருவாயிலுள்ளதால் சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவர்கள் குடும்பத்தோடு பணியாற்றும் ஊர்களுக்கு திரும்பும்வண்ணமும்  சிறப்புப் பேருந்துகளைதமிழக அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கிவரவுகிறது.இதன் தொடர்ச்சியாக வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 17-ம் தேதி  வெள்ளிக்கிழமை 555 பேருந்துகளும், 18-ம் தேதி 645 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.. திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், குமரிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டுமென தமிழக போக்குவரத்து கழகம்கேட்டுக்கொண்டுள்ளது.
 

 

Tags : தமிழகத்தில் சுபமுகூர்த்தம் மற்றும் வார விடுமுறை சிறப்பு பேருந்துக்கள் இயக்கம்.

Share via