இருசக்கர வாகனத்தில் 11 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது,

by Editor / 15-05-2024 12:13:05am
 இருசக்கர வாகனத்தில்  11 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது,

திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தெற்கு வாயிலில் அருகே பொது தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது இதை அடுத்து தனிப்படையினர் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த  வேல்முருகன்(26) என்பது தெரிய வந்ததை அடுத்து வேல்முருகனை கைது செய்து அவரிடமிருந்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags : இருசக்கர வாகனத்தில் 11 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது,

Share via