தெலுங்கானா பெண் எம்.எல்.ஏ.கார் விபத்தில் பலி.

by Admin / 24-02-2024 03:35:41pm
தெலுங்கானா பெண் எம்.எல்.ஏ.கார் விபத்தில் பலி.


தெலுங்கானா பி.ஆர்.எஸ்.கட்சி செகந்திராபாத் கன்டோன் மென்ட் சட்டமன்ற உறுப்பினர் லாஸ்யா நந்திதா (36)
இன்று அதிகாலை கார் விபத்தில் பலியானார்.

கடந்த ஆண்டு ,இவருடைய தந்தையும் எம்.எல்.ஏ வுமான சாயண்ணா மரணமடைந்ததையொட்டி இவர்இதே தொகுதியில் சந்திரசேகர் ராவ் கட்சியான பாரத் ராஷ்டிரா சமிதி கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.

தன் உதவியாளர்  அசோக்குடன் சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்ததனால் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது..அத்துடன், அதி வேகமாக காரை ஓட்டிதாகவும் தகவல்..இதற்கு முன்பு அவர் இரண்டு முறை கார் விபத்தில் சிக்கி காயத்துடன் உயிர் தப்பி உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது...

 

Tags :

Share via

More stories