இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம்.

ஆந்திரா: குப்பத்தில் கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்திய கொடூரம் அரங்கேறியுள்ளது. ரூ.80 ஆயிரம் கடன் வாங்கிய திம்மராயப்பா என்பவர் கடனை திரும்பச் செலுத்த முடியாத காரணத்தால் தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அவரின் மனைவி சிரிஷாவை மரத்தில் கட்டிவைத்து ஒரு கும்பல் அடித்துள்ளது. மரத்தில் கட்டிவைத்து கொடுமைபடுத்தியவர்களை போலீஸ் கைது செய்தது.
Tags :