சென்னைக்கு பெருமை சேர்க்கும் ‘கிண்டி சிறுவர் பூங்கா’

சென்னை ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் இடையில் அமைந்துள்ளது 'கிண்டி சிறுவர் பூங்கா'. 22 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பூங்கா கடந்த 1959ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. நவீன உலகின் குழந்தைகள் பொது வெளியில் சென்று விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை வாசிகளுக்கு இந்த பூங்கா வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
Tags :