குரூப் 4 தேர்வு முடிவுகள் 8 மாதங்களுக்குப் பின்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு 2022 ஜூலை 24ஆம் தேதி நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முடிவுகள் 8 மாதங்களுக்குப் பின்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது 18 லட்சத்து 36 ஆயிரம் பேர் 7,301 காலி பணியிடங்களுக்கான தேர்வை எழுதி காத்திருந்தனர் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு இந்த காலி பணியிடங்களினுடைய எண்ணிக்கை 1017 ஆக அதிகரித்திருக்கின்ற நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகி இருப்பதில் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . தேர்வு முடிவுகள் மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டு இருந்த நிலையில் , இன்று வெளியிடப்பட்டிருப்பதன் காரணமாக தேர்வு எழுதியவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாரியத்தின் இணையதளத்தை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் www.tnpsc.gov.in
Tags :