பயங்கர சாலை விபத்து.. 7 பேர் பலி
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தின் தர்மசாலா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கோழிகளை ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கோழிகளை ஏற்றிக்கொண்டு கல்கத்தாவிலிருந்து புவனேஸ்வர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Tags :