பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து 6 பேர் பலி
பாகிஸ்தானில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் லாகூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷேகுபுரா என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்த விபத்து நடந்தது. விபத்து நடந்தபோது பேருந்தில் 60 பயணிகள் இருந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















