சிறுவனின் தொடையில் குத்திய 3 அடி நீள குச்சி!

by Admin / 16-08-2021 11:16:45am
சிறுவனின் தொடையில் குத்திய 3 அடி நீள குச்சி!

தஞ்சையில் 11 வயது சிறுவனுக்கு தொடையில் குத்திய குச்சியை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் வானதிரையன் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் ராஜா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்தநிலையில் சிறுவன் மரத்தில் இருந்து தவறி விழுந்த போது கீழே இருந்த 3 அடி நீளம் கொண்ட குச்சி தொடையில் குத்தியுள்ளது. இதையடுத்து சிறுவனை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக பல மருத்துவமனைகள் சென்ற பிறகு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் சிறுவன் தொடையில் இருந்த குச்சியை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
 
இதையடுத்து சிறுவன் தற்போது நலமாக உள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார், உடலில் எந்த பாகத்திலும் கம்பி, குச்சி போன்றவை குத்தினால் மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

 

Tags :

Share via

More stories