அரசியலில் யார் வேண்டுமானாலும் ,எந்த கூட்டணியிலும் இணையலாம் -தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

by Admin / 24-01-2026 12:15:16pm
அரசியலில் யார் வேண்டுமானாலும் ,எந்த கூட்டணியிலும் இணையலாம் -தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

இன்று தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகத்தில் தேசிய ஜனநாயக முற்போக கூட்டணி இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை என்றும் கூட்டணி குறித்த தேமுதிகவின் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்ததோடு அரசியலில் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் மாறலாம் .யார் வேண்டுமானாலும் ,எந்த கூட்டணியிலும் இணையலாம் என்று குறிப்பிட்டதோடு தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாதால் கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும்போதிய அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்ததாா். நேற்று மதுராந்தகத்தில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணியில் முதல் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் இதர கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற நிலையில் பிரேமலதா விஜயகாந்த் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via