விஜயகாந்த் நினைவிடத்தில் கண் கலங்கிய விஷால்
சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா இன்று காலை அஞ்சலி செலுத்தினர். அப்போது விஷால் கண் கலங்கி அழுதார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், விஜயகாந்த் மறைந்தபோது என்னால் வர முடியாதது துரதிர்ஷ்டவசமானது. வாழும்போது பலருக்கும் கடவுளாக இருந்தவர் விஜயகாந்த். விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் 19ஆம் தேதி அஞ்சலி கூட்டம் நடைபெறும். நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க பரிசீலனை செய்யப்படும் என்றார்.
Tags :


















