தமிழகம் முழுவதும்  2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல்

by Editor / 24-04-2021 04:27:38pm
தமிழகம் முழுவதும்  2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல்


 

இந்தியாவில்  மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் சுனாமி போன்று இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.  அதன்படி தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மினி கிளினிக்குகளில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் முடியும் வரை மினி கிளினிக்குகள் செயல்படாது என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via
Logo