முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் சேவைகள் தற்காலிக முடக்கம்

by Editor / 05-10-2021 09:39:00am
முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் சேவைகள் தற்காலிக முடக்கம்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள சேவைகள் தற்காலிகமாக முடங்கியது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரவு 9.10 மணி முதல் இணைய சேவைகளை வழங்கி வரும் முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் செயலிகள் இயங்கவில்லை.சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இணைய சேவை செயலிகளின் முடக்கத்தால் இணையதள வாசிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சேவை முடங்கியதாகவும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் பேஸ்புக் அறிவித்தது. விரைவில் சேவை துவங்கும் என்றும் விளக்கம் அளித்தது. இதனைத் தொடர்ந்து, சுமார் 8 மணி நேரம் வரை முடங்கிய இந்த வலைத்தள பக்கங்கள் இன்று காலை 5 மணியளவில் மீண்டும் இயங்கத் துவங்கின. இதனால், சமூகவலைத்தள பயனாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo