மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

by Staff / 25-09-2023 02:46:32pm
மாற்றுத்திறனாளி  தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த நிலக்கோ ட்டை அருகே உள்ள ஒருத்தட்டு கிராமம் ராஜதானி க்கோட்டையைச் சேர்ந்த துரைப்பாண்டி என்ற மாற்றுத்திறனாளி திடீரென தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் தெரிவிக்கையில், மாற்றுத் திறனாளியான என்னை எனது அண்ணன் குடும்பத்தினர் மற்றும் எனது தாயார் கவனித்து வருகின்றனர். நாங்கள் விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம். எங்கள் நிலத்து க்கு சென்று வந்த பொதுப்பா தையை சிலர் மறித்து இடையூறு செய்து வரு கின்றனர்.கடந்த 15 நாட்களாக தொடர்ந்து எங்க ளிடம் தகராறு செய்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். ஜமீன்தார் காலத்தில் இருந்து 3 தலைமுறையாக பயன்படுத்தி வந்த இந்த நிலத்தை அபகரிக்க முயலும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்து தீக்குளிக்க முயன்றேன் என்றார். இதனையடுத்து அவரை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து செல்லுமாறு கூறினர்.

 

Tags :

Share via

More stories