கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒருவார காலமாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் முழுவதும் பணி படர்ந்து இயற்கை அழகு ததும்ப ததும்ப மிக அழகாக காட்சியளிக்கிறது. இதனால் மலைப்பகுதிகள் ரம்யமாக காட்சி தருவதோடு, வெப்பத்திற்கு இதமான குளு குளு காலநிலை நிலவுகிறது. இதைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து குளிர்ச்சியையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். இதனால் கொடைக்கானல் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Tags :