சென்னையில் மழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு.
சென்னையில் தொடர் மழை காரணமாக மயிலாப்பூர், புளியந்தோப்பு, ஓட்டேரியில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.அண்ணா சாலை, தி.நகர், வடபழனி உள்ளிட்ட பெரும்பாலான சாலைகளில் நீண்ட தொலைவிற்கு நகர முடியாத சூழலில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.மார்கழியில் வரலாறு காணாத மழைப் பொழிவு. மயிலாப்பூரில் 20 சென்டிமீட்டர் பதிவு.செங்குன்றம் ஏரியிலிருந்து 7 மணி அளவில் விநாடிக்கு 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.சென்னையில் கனமழை பெய்து வரும் சூழலில் 4 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டிருக்கிறது, சென்னை மாநகருக்கு உட்பட்ட ஏழு சாலைகள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கை.
Tags :



















