இந்திய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே ஹார்மூஸ் நீரிணையை கடந்து இந்திய எல். பி. ஜி. டேங்கர் கப்பல்கள் சிவாலிக்- நந்தா தேவி ஆகிய இரண்டு கப்பல்கள் பாதுகாப்பாக இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் ஜிங்கா இந்த இரண்டு கப்பல்களும் சனிக்கிழமை அதிகாலையில் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்ததாக தெரிவித்தார் .இந்திய வெளியுறவுத் துறவி அமைச்சர் எஸ் .ஜெய்சங்கர் மற்றும் ஈரான் வெளியுறவுத் துறைஅமைச்சர் இடையே நடந்த உயர்மட்ட பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து இந்த கப்பல்கள் செல்ல ,ஈரான் அனுமதி அளித்தது. இந்த கப்பல்கள் சுமார் 2,700 மெட்ரிக் டன் எல்.பி.ஜி ஏரிவாயு ஏற்றி செல்கின்றன.. மேற்காசிய நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை உறுதி செய்ய இந்தியா மேற்கொண்ட இந்த நடவடிக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
. ஈரான் மற்றும் இஸ்ரேல் ,அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ,இந்திய கொடியிடப்பட்ட கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல ஈரான்அனுமதி அளித்ததுள்ளது .இதுகுறித்து ஈரான்,இந்தியா எங்கள் நண்பன் என்று தூதர் முகமது பதாலி குறிப்பிட்டுள்ளார்.
Tags :


















