உலகின் மிகப் பெரிய கட்டடம் கட்ட சவுதி அரேபியா திட்டம்

by Editor / 31-07-2022 03:16:39pm
உலகின் மிகப் பெரிய கட்டடம் கட்ட சவுதி அரேபியா திட்டம்

சவுதி அரேபிய அரசு 75 மைல் நீளத்துக்கு இருபுறங்களிலும் 1600 அடி உயரமுள்ள வானளாவிய கட்டிடங்களை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவுறுத்தலின்படி வானளாவிய கட்டிடங்களை உருவாக்க வடிவமைப்பாளர்கள் திட்டமிட்டு உள்ளனர்.மிரர் லைன்  என பெயரிட்டுள்ள இந்த திட்டம் கட்டிடம் முடிக்கப்பட்டால் உலகின் மிகப்பெரிய கட்டுமானமாக இருக்கும். இந்த திட்டத்திற்கு ஒரு லட்சம் கோடி டாலர் செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது கட்டடங்களின் விரைவு ரயில் இயக்குவதும் நிலத்தில் 2 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு விளையாட்டரங்கம் கட்டுவதும் இந்த திட்டத்தில் அடங்கும் என குறிப்பிட்டுள்ளது.

 

Tags :

Share via