மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து

by Editor / 31-07-2022 03:12:31pm
மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து

ஜார்ஜியாவில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். குடெவரி நகரில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பாராகிளைடிங் பயிற்சிக்காக சிறிய விமானத்தில் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளானது தகவலறிந்து சென்ற பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாக அதே இடத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானி உட்பட 4 பாதுகாப்பு படை வீரர்கள் மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவ ஊழியர்கள் என 8 பேர் உயிரிழந்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo