முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழர் கூட்டமைப்பினர் உற்சாக வரவேற்பு.

by Editor / 04-09-2024 10:27:13am
  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  தமிழர் கூட்டமைப்பினர் உற்சாக வரவேற்பு.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து சிகாகோ நேற்று (செப்., 03) சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழர் கூட்டமைப்பினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், நேற்று மாலை கடற்கரையோரம் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டார். இது குறித்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு 'மாலையின் அமைதி புதிய கனவுகளுக்கு களம் அமைக்கிறது' என கூறியுள்ளார்.

 

Tags : சிகாகோ கடற்கரையோரம் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Share via