மோடியை எதிர்க்க ஆளே இல்ல

by Staff / 29-11-2023 02:03:38pm
மோடியை எதிர்க்க ஆளே இல்ல

பிரதமர் மோடியை எதிர்க்க அடுத்த 40 ஆண்டுகளுக்கு இங்கே ஒரு அரசியல் தலைவரும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, "குறித்து வைத்துக்கொள்ளுங்கள். 2024 மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெல்லும். பொய் பிரசாரங்களை முறியடித்து, 3வது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்பார். இந்தியாவை இன்னும் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி அவர் அழைத்துச் செல்வார்" மோடியை எதிர்க்க அடுத்த 40 ஆண்டுகளுக்கு ஒருவரும் கிடையாது என்றார்.

 

Tags :

Share via