தனியார் கல்லூரிவாக்கு எண்ணிக்கை மையத்தில் சிக்கிக்கொண்ட கார் -போலீஸ் குவிப்பு

by Editor / 21-02-2022 12:40:57am
தனியார் கல்லூரிவாக்கு எண்ணிக்கை மையத்தில் சிக்கிக்கொண்ட கார் -போலீஸ் குவிப்பு

தென்காசி மாவட்டத்தில் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 6 நகராட்சிகள் மற்றும் 1 7
பேரூராட்சிகளுக்கு நடைபெற்று முடிந்தன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உடைய வாக்குப்பெட்டிகள் தென்காசி செங்கோட்டை புளியங்குடி சங்கரன்கோவில் உள்ளிட்ட 6 பகுதிகளில் வைக்கப்பட்டு 22ஆம் தேதி எண்ணப்பட உள்ளன  இந்தநிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி ராயகிரிபேரூராட்சி, சிவகிரி பேரூராட்சி, வாசுதேவநல்லூர் பேரூராட்சி, ஆகிய பகுதிகளுக்கு வாக்கு என்னிக்கை மையங்களாக புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி நடைபெற உள்ளன. வாக்குப் பெட்டிகளை பாதுகாக்கும் பொருட்டு அனைத்து கட்சிகள் சார்பிலும் கட்சி பிரமுகர்கள் அங்கு தங்கி முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் இருபதாம் தேதி இரவு 11 மணிக்கு மேல் கல்லூரி வளாகத்தில் ஒரு பிரிவு மட்டுமே தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்துவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு பகுதியில் தேவையின்றி வெளி நபர்கள் நடமாட்டமும் வெளி நபர்களின் கார்களும் வந்து சென்ற வண்ணம் இருந்துள்ளனர்.
 இந்த நிலையில் குறிப்பிட்ட கட்சியினுடைய கார் ஒன்று அந்த பகுதியில் இன்று உலா வந்துள்ளது தேவையின்றி இந்த கார் எதற்கு வந்தது என்பது குறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த காரையும் முற்றுகையிட்டு சிரை பிடித்து வைத்துள்ளனர். இதன் காரணமாக வீராசாமி செட்டியார் கல்லூரி வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும்,தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும்,அவர்களது உறவினர்களும்  அங்கு முகாமிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில்  பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

தனியார் கல்லூரிவாக்கு எண்ணிக்கை மையத்தில் சிக்கிக்கொண்ட கார் -போலீஸ் குவிப்பு
 

Tags : வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிக்கிக்கொண்ட கார் -போலீஸ் குவிப்பு

Share via