தவெக-வில் இணைந்தது ஏன்? EX IFS அருண் அதிரடி கருத்து

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் EX IFS அதிகாரி அருண்ராஜ் இணைந்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அடிப்படை சமூக அரசியல் மாற்றத்துக்காக விஜய் எடுத்துள்ள முயற்சியில் என்னையும் இணைத்தது மகிழ்ச்சியை தருகிறது. விஜயின் பணி தமிழ்நாட்டுக்கு தேவையானது. நான் பொது மனிதராக பல விஷயங்களை பார்த்துவிட்டேன். மக்கள் மாற்றத்தை எதிர்கொண்டு இருக்கிறார்கள். மக்களை அரசியல்வாதியாக பொதுவாழ்க்கையில் அணுகுவது கடினம் தான். ஆனால், அனைத்தையும் கற்றுக்கொள்ளலாம்" என தெரிவித்தார்.
Tags :