வைகோ விரைந்து குணமடைய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விரைந்து நலம் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது X தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "வைகோ அவர்கள் கலிங்கப்பட்டியில் உள்ள வீட்டில் தவறி விழுந்ததில் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக துரை வைகோ வெளியிட்ட அறிவிப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். வைகோ அவர்களுக்கு சென்னையில் மேற்கொள்ளப்படவுள்ள அறுவை சிகிச்சை வெற்றி பெற வேண்டும், அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து பொதுவாழ்வை தொடர வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
Tags :