பெண் போல் பேசி 7 பெண்களை பலாத்காரம் செய்த நபர்

by Staff / 26-05-2024 05:42:19pm
பெண் போல் பேசி 7 பெண்களை பலாத்காரம் செய்த நபர்

மத்தியபிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் மஜ்ஹெளலி என்ற இடத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தன்னை அடையாளம் தெரியாத நபர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என போலீசில் புகார் அளித்துள்ளார். அதுகுறித்த விசாரணையில், பெண் போல் குரல் மாற்றி பேசும் செயலியை பயன்படுத்தி உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அந்த நபர். இந்நிலையில் பிரஜேஷ் குஷ்வாஹா என்ற குற்றவாளி தனது 2 நண்பர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் இதே போன்று 7 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரஜேஷ் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo