மீன்கள் பல மடங்கு விலையுயர்ந்து விற்பனையாகிவருகிறது.

by Editor / 08-02-2023 09:34:09pm
மீன்கள் பல மடங்கு விலையுயர்ந்து விற்பனையாகிவருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் குமரிக்கடல் மற்றும் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த சூரைக்காற்று வீசி வந்ததால் பெரும்பாலான பைபர் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

தொடர்ந்து காற்றின் தாக்கம் அதிகரித்த நிலையில் ஒட்டு மொத்தமாக குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்திருந்த நிலையில் மீன்வரத்தின்றி துறைமுகங்கள் வெறிச்சோடியது.

கடந்த மூன்று நாட்களாக கடலில் காற்றின் வேகம் குறைந்த நிலையில் படிப்படியாக பைபர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் போதிய மீன் வரத்தின்றி ஏமாற்றத்துடனே கரை திரும்பி வந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதோடு கடல் சீற்றத்துடனே காணப்படும் நிலையில் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த 8-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் குளச்சல் மீன்பிடி துறைமுக பெழிமுகத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட ஒருசில பைபர் படகு மீனவர்கள் குறைந்த அளவிலான மீன்களுடன் கரை திரும்பிய நிலையில் மீன் விலை கடுமையாக உயர்ந்து சாதாரணமாக 1-கிலோ 800-ரூ வரை விற்பனை ஆகும் வஞ்சிரம் மீன் 1200-ரூ க்கும் 250-ரூ க்கு விற்பனை ஆகும் விளை மீன் 400-ரூக்கும் 100-ரூக்கு விற்பனை ஆகும் சூரை மீன் 250-ரூ க்கும் 40-கிலோ எடை கொண்ட மயில் மீன் 9-ஆயிரம் ரூ க்கும் விற்பனையானது அதேப்போல் அயலை கொழிசாளை போன்ற மீன்களும் பல மடங்கு விலையுயர்ந்தே விற்பனையானது.

 

Tags :

Share via