கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம்- எஸ்.பி., சஸ்பெண்ட், கள்ளக்குறிச்சி காவல்துறையினர் கூண்டோடு அதிரடி மாற்றம்

by Editor / 19-06-2024 09:42:18pm
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம்- எஸ்.பி., சஸ்பெண்ட், கள்ளக்குறிச்சி காவல்துறையினர் கூண்டோடு அதிரடி மாற்றம்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளசாராயம் விவகாரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது.இந்த விவகாரத்தை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்வரன் குமார் ஜடாவத் பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், அம்மாவட்ட எஸ்.பி., சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, புதிய எஸ்.பியாக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார்.

காவல்துறை, வருவாய் துறையினரின் விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் பாக்கெட் சாராயம் அருந்தியிருக்க கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. இதைதொடர்ந்து, அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், இந்த விவகாரத்தில் பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான சோதனையில் 200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் மெத்தனால் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விஷ சாராயம் சம்பவம் எதிரொலி கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறையினர் விவரங்கள்:

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா. தற்காலிக பணிநீக்கம்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன்.

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர். திருமதி கவிதா.

திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், திருமதி பாண்டி செல்வி.

திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஷிவ்சந்திரன் உதவி ஆய்வாளர். 

காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்.  மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம்.

 

 

Tags : கள்ளக்குறிச்சி காவல்துறையினர் கூண்டோடு அதிரடி மாற்றம்

Share via