சென்னை நீலாங்கரையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில்மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கல்வி விருது மற்றும் ஊக்க தொகை வழங்கும் விழா
இன்று சென்னை நீலாங்கரையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கல்வி விருது மற்றும் ஊக்க தொகை வழங்கும் விழா நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கப்பட உள்ள விழாவிற்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பன்னிரண்டு மணி அளவில் மாணவர்களும் பெற்றோர்களும் வரவேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்குகிறார். இந் நிகழ்வில் தமிழ்நாடு புதுச்சேரி முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருதும் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகின்றன. தற்பொழுது ஈரோடு, நீலகிரி ,திருப்பூர் ,கோவை, பெரம்பலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
Tags :

















