போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய ஆசிரியர் கைது.
போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய ஆசிரியர் கைது
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தொம்பரகாம்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம், 51; இவர், குட்டூர் அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்களின் மதிப்பெண் சான்றிதழை அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில், மகாலிங்கம் பிளஸ் 2 தேர்வில் 580 மதிப்பெண் மட்டும் எடுத்திருந்த நிலையில், பணியில் சேர்வதற்காக மதிப்பெண் சான்றிதழில், 972 மதிப்பெண் என திருத்தி, கடந்த 1990ல் பணிக்கு சேர்ந்துள்ளது தெரிந்தது.
இதையடுத்து, தர்மபுரி டி.இ.ஓ., பாலசுப்பிரமணி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.
மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags :



















