பழனி முருகன் கோவில்.கந்தசஷ்டி விழா
பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.கந்தசஷ்டி விழா தொடங்கும் நாளன்று மாலை 5.21 மணி முதல் 6.23 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கிறது. பின்பு கந்தசஷ்டி திருவிழா காப்புக்கட்டு நடைபெறுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு மலைக்கோவில் மற்றும் உபகோவில்கள் அனைத்திலும் நடை சாத்தப்படும். எனவே நண்பகல் 12.30 மணிக்கு பிறகு பக்தர்கள் யாரும் படிப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவற்றின் மூலம் செல்ல அனுமதி இல்லை. சூரியகிரகணம் முடிந்த பின்பு 7 மணிக்கு மேல் சம்ரோஷன பூஜை நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Tags :