அதிமுக அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

by Editor / 21-07-2022 08:42:08am
அதிமுக அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தை கைப்பற்றுவது யார் என்ற போட்டியின் காரணமாக ஏற்பட்ட மோதல் காரணமாக காவல்துறையின் அனுமதியோடு வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி  அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் இன்று அகற்றப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை வருவாய் துறை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கவுள்ளனர். அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியின் மேனேஜர் இன்று பெற்றுக் கொள்கிறார். இதனையடுத்து அதிமுக அலுவலகம் 10 நாட்களுக்குப்பின்னர் இன்று திறக்கப்டுவதால் சமபாவிதங்கள் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் அதிமுக தலைமை அலுவலகம்  அருகே போலீசார் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Police gathering at AIADMK office

Share via