கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிப்பு காவலர் கைது.
சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மகன் பிரதீப் (20 )இவர் மேலநீலிதநல்லூரில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு பிஏ படித்து வருகின்றார். இந்நிலையில் வடக்கு மாவிலியூத்து கிராமத்தில் உள்ள கோவில் கொடை விழாவிற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு அப்போது பக்கத்து ஊரை சேர்ந்தவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது .இந்நிலையில் வாக்குவாதம் முற்றவே இவர்களை தாக்க கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய போது எதிர்பாராத விதமாக பிரதீப் அங்குள்ள கிணற்றில் விழுந்துள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்து மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் .மேலும் இவர்களை துரத்தியவர்களில் சுரண்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் தேவராஜ் (49) என்ற காவலர் உள்ளிட்ட நபர்கள் குறித்து சின்னகோவிலான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் திரண்டு உள்ளதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர் பிரதீப் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் சுரண்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் தேவராஜ் (49) என்ற காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்
Tags : College student life guard arrested after falling into well