வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்

by Editor / 12-10-2021 12:00:16pm
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை எல்லையில் ஆரணி ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி 2018 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்நிலையில் பால பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு தற்காலிக செம்மண் சாலை அமைக்கப்பட்டது. இந்த வழியாகத்தான் போக்குவரத்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள நந்தனம் காட்டுப்பகுதியில் உள்ள ஓடைகளில் இருந்து பாய்ந்து வந்த தண்ணீரால் இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

எனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்காலிகமாக அமைக்கப்பட்ட செம்மண் சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு புதிதாக கட்டி வரும் மேம்பாலத்தின் மீது கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதோடு லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட செம்மண் சாலை மீண்டும் சீர்செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்தால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via