இன்புளூயன்சாவால் தமிழ்நாட்டில் முதல் மரணம்

by Staff / 13-03-2023 05:47:17pm
இன்புளூயன்சாவால் தமிழ்நாட்டில் முதல் மரணம்

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை அதிகமாக தாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இன்புளூயன்சா வைரஸ் பரவலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo