காரில் சென்ற பெண்ணை கடத்தி கத்தி முனையில் மிரட்டி கூட்டு பலாத்காரம் 5 பேரை கைது

by Editor / 11-08-2022 01:58:22pm
காரில் சென்ற பெண்ணை கடத்தி கத்தி முனையில் மிரட்டி கூட்டு பலாத்காரம் 5 பேரை கைது

சென்னை போரூர் அருகே காரில் சென்ற பெண்ணை கத்தி முனையில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்முறை செய்து நகை பறித்து சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். போரூரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன் தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்தார். கொளுத்துவான்சேரி அருகே சென்ற போது காரை வழி மறித்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி டிரைவரை தாக்கி விரட்டி விட்டு பெண்ணுடன் காரை கடத்திச் சென்றனர். பின்னர் அங்கிருந்த காலி இடத்தில் அந்த பெண்ணை கத்தி முனையில் நான்கு பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அந்த பெண்ணிடம் இருந்த 8 சவரன் நகையை பறித்து கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo