சென்னை அணிவகுக்கும் வாகனங்கள்…

by Editor / 14-11-2023 08:47:56am
சென்னை அணிவகுக்கும் வாகனங்கள்…

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் தங்கியிருந்து வேலை செய்து வந்த தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், சென்னையில் தங்கி படித்து வரும் மாணவர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காகச் சொந்த ஊர்களுக்குச் 10சுமார்  இலட்சத்திற்கும் அதிகமானோர் சென்றிருந்தனர்.

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலை உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் 3 நாள் விடுமுறை என்ற காரணத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பகல் இரவு மட்டும் தென் மாவட்டங்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் 1. 50 லட்சம் வாகனங்கள் தென் மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.

இவை அனைத்தும்நேற்று இரவு முதல் இன்று வரை ஒரே நாளில் அதிகப்படியான வாகனங்கள் தென் மாவட்டங்களிலிருந்து சென்னையை நோக்கி படையெடுத்து வருவதால் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆத்தூர் சுங்கச்சாவடியில் உள்ள மொத்த 10 கவுண்டர்களில் 8 கவுண்டர்கள் சென்னை மார்க்கமாக வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த மக்கள் அதிகளவில் சென்னைக்குத் திரும்பியதால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

 

Tags : சென்னை அணிவகுக்கும் வாகனங்கள்…

Share via

More stories