7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.18 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.

by Editor / 14-11-2023 08:37:36am
7 மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.18 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.

கனமழை காரணமாக தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

Tags : .18 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.

Share via

More stories