மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வந்தார்.

by Admin / 01-08-2026 12:06:35pm
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வந்தார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வந்தடைந்தார். மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 23 முதல் நடைபெற்று வரும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான பத்து நாள் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் அவர் பங்கேற்க உள்ளார். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் கிராமம் மற்றும் பூத் அளவில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சியும் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் காண புதிய நடைமுறைகளை உருவாக்குதல் போன்றவற்றை குறித்து 74 மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். பயிற்சி நிறைவுற்ற பின்னர் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo