விஜய் கூறிய கருத்தில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை- திருமா

by Staff / 30-06-2024 01:07:31pm
விஜய் கூறிய கருத்தில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை- திருமா

கல்வி விருது விழாவில் தவெக தலைவர் விஜய் கூறிய கருத்தில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை என விசிக தலைவரும் எம்.பி.-யுமான திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என விஜய் கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. மாணவர்கள் நல்ல தலைவர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் கூறியதாகவே நான் கருதுகிறேன்" என கூறியுள்ளார்.

 

Tags :

Share via