கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு
இன்று கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டசிவகங்கை சார்ந்த அண்ணன் தம்பிகளான கருப்பசாமி , காளீஸ்வரன் என்ற கார்த்திக்,தவசி மூன்று பேர்களும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2025 நவம்பர் இரண்டாம் தேதி கோவை விமான நிலையம் அருகே காரில் தன் நண்பரோடு பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி மற்றும் அவரது நண்பரை தாக்கி மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக மூவர் மீது பீளமேடு காவல்துறையினர் எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். குற்றம் நடந்த நான்கு மாதங்களுக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு டி.என்.ஏ அறிக்கை உள்ளிட் ஆதாரங்கள் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் ,இன்று அவர்கள் மூன்று பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவர்களுக்கான தண்டனை விவரங்களை பின்னர் நீதிபதி அறிவிப்பார்.
Tags :


















