திமுக அமைச்சர்களுக்கு அச்சம் - அண்ணாமலை

by Staff / 08-08-2023 03:02:37pm
திமுக அமைச்சர்களுக்கு அச்சம் - அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜூலை 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்நிலையில், விருதுநகர் பாஜக அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை காவல் துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தினர். இது குறித்து அண்ணாமலை தனது ட்வீட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via