2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்கும்- அண்ணாமலை

by Staff / 06-07-2024 04:25:40pm
2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்கும்- அண்ணாமலை

2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களை சார்ந்து, விவசாயிகளை முன்னிலைப்படுத்திய ஆட்சியை பாஜக அமைக்கும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை விட அரசு நூலகம், அரசு மருத்துவமனைகள் குறைவாக உள்ளது. இதனால்தான் புதிய தமிழ்நாட்டை உருவாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. கலாச்சாரம், சட்டம் ஒழுங்கு, நீட் ஏன் தேவை உள்ளிட்டவற்றை பற்றி பாஜகவினர் பேச வேண்டும்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories