உடல் எடை குறைக்க வேண்டுமா?:

by Editor / 14-02-2022 07:22:35pm
உடல் எடை குறைக்க வேண்டுமா?:

 

”கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது முதுமொழி. அதாவது உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன் படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும்.

 நீர் திரிந்து இருக்கும் உடல் தான் குண்டாக இருக்கும் என்று ஏற்கனவே பதிவு செய்திருப்பேன்.

நீரை திரிந்து (கெட்டுப்)போகச் செய்வதில் பிரதான காரணம் வகிப்பது இந்த உப்பு தான்.

கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது முதுமொழி. அதாவது உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன் படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும்.

உப்புதான் உடலில் ஊளை சதை போடுவதற்கு மிக முக்கிய காரணம். உப்பானது நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும் குணமுடையது.

இதற்குத் தீர்வை இந்த பதிவில் பார்க்கலாம் பல முறைகள் இருக்கின்றது என்றாலும் நாம் இந்த "பால்" முறையை தேர்ந்தெடுக்கலாம்

கொள்ளுப் பால்:

செய்யும் முறை

100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி முளைக்கட்ட வேண்டும். 1-1.5 செமீ முளைவிட்டப் பின் சிறிது தேங்காய் துருவலையும் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும்.

தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லது வடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும்.

உண்ணும் அளவு

ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான் மருந்தின் அளவு. ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குடிக்க வேண்டாம்

பலன்கள்

சிறுநீர் நன்றாக வெளியேறும்.அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடை குறையும். சளித்தொல்லை நீங்கும். பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும்.

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

 

Tags :

Share via

More stories

Logo