வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த முக்கிய நடிகர் காலமானார்

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் நிதிஷ் வீரா. இவர் புதுக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்த நிலையில், வெண்ணிலா கபடிகுழு திரைப்படம் அவருக்கு அங்கீகாரம் கொடுத்து.
இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து உள்ளார்.
இந்நிலையில், நடிகர் நிதிஷ் வீராவிற்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றால் இன்று காலை உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :