"குண்டாஸ்" மூலம் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கி வரும் போலீசார்
மதுரை நகரில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சட்ட விரோதமாக செயல்படும் ரவுடிகளை போலீசார் கண்காணித்து அவர்களின் குற்ற செயல்களை தடுக்க குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.மதுரை தெற்கு வாசல் சப்பாணி கோவில் தெருவில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நால்வரில் மூவருக்கு ஏற்கனவே குண்டர் சட்டம் பாயந்து சிறையில் உள்ள நிலையில் நேற்று மீதமிருந்த சிவகங்கை மாவட்டம் சக்கந்தி பகுதியை சேர்ந்த முத்துராஜா என்பவரின் மகன் முத்துக்குமார் (31) என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.இதுபோல செல்லூர் அகிம்சாபுரத்தை சேர்ந்த அருணாசலம் என்பவரின் மகன் வேல்முருகன் என்ற டோல்(27) என்பவர் மீதும் குண்டர் பாய்ந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணி, தனிப்படை போலீசாரின் கண்காணிப்பு , அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்களின் அறிவுரையின்படி குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தீவிர இருசக்கர வாகன போலீசாரின் ரோந்து பணி, பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகள் பற்றிய தொடர் கண்காணிப்பு பணி முதலியன மூலம் ரவுடிகளின் கொட்டத்தை ஓரளவு அடக்கினாலும் இதில் தொய்வு ஏதும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.
Tags :