பா.ம.க நிறுவனர் ராமதாஸ்- அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி..வி..சண்முகம் சந்திப்பு.

by Editor / 06-02-2024 10:22:13am
 பா.ம.க நிறுவனர் ராமதாஸ்- அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி..வி..சண்முகம் சந்திப்பு.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்புடன் கூட்டணி பேச்சு வார்த்தைகளை தொடங்கி நடத்தி வருகின்றன, தி.மு.க தரப்பிலும், அ.தி.மு.க தரப்பிலும் கூட்டணிகள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் இதுவரை முழுமையான பேச்சு வார்த்தை உள்ளிட்ட தகவல்கள் வெளியாகாமல் இருந்து வந்தது இந்நிலையில், இன்று கூட்டணி பேச்சுவார்த்தையில் திடீர் திருப்பமாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். திண்டிவனம்  தைலாபுரத்தில் பா.ம.க நிறுவனத் தலைவர் மருத்துவர்.ராமதாசுடன் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இரு கட்சியும் இது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :  பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு.

Share via