சமத்துவ சமுதாயம் அமைக்க பாடுபடுவோம் - உதயநிதி

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், சாதிய தாக்குதலில் பாதிப்புக்குள்ளான பள்ளி சிறுவன் மற்றும் சிறுமி தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். அவர்களை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குணமடைந்துள்ள அந்த சிறார்களையும் - அவர்களது குடும்பத்தாரையும் நெல்லையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம். சிறுவன், சகோதரியை சந்தித்து ஆறுதல் கூறினோம். மாணவனின் குடும்பத்தாருக்கு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய வீடு ஒதுக்கீட்டு ஆணையை அளித்தோம். மாணவனை நெல்லையில் உள்ள பள்ளியில் சேர்க்க மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. மாணவனின் தாயாருக்கு நெல்லையில் உள்ள சத்துணவு மையத்திற்கு பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
Tags :