நாளை மறுநாள் தச்சன் குறிச்சியில் ஜல்லிக்கட்டு
புத்தாண்டில் முதல் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி. புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டின் முதல் போட்டியாக இது அமைவதால் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு தீவிரப் படுத்தி உள்ளது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புத்தாண்டு தொடக்கத்திலே ஜல்லிக்கட்டு உற்சாகம் புதுக்கோட்டையில் களை கட்டப் போகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு தமிழக அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது .அதன்படி வீரர்கள் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து உடல் தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் ..மேலும் ஜல்லிக்கட்டில் ஒரு வீரர் ஒரு காளையை மட்டும் பிடிக்க வேண்டும் .இருவர் சேர்ந்து ஒரு காளையை பிடித்தால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர் .காளையின் வால் ,கொம்பு அல்லது கால்களை பிடித்து இழுக்க கூடாது. திமிலை மட்டுமே பிடித்து தழுவ வேண்டும். மது அருந்துதல் தடை செய்யப்பட்டுள்ளதால் வீரர்கள் போட்டி களத்திற்குள்த் மது அருந்தி வருதல் கூடாது .2026 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு வீரர் மற்றும் காளைகளுக்கான பதிவுகள் அனைத்தும் அதிகார பூர்வமான www ஜல்லிக்கட்டு.tn.gov.in மூல மட்டுமே நடைபெறுவதாகவும் இணையத்தில் பதிவு செய்த பின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான வீரர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆதார் அட்டை, புகைப்படம் மற்றும் மருத்துவ சான்றிதழ் போன்றவற்றை ஆன்லைன் பதிவின்போது பதிவேற்ற வேண்டு.ம் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 3 அன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் .....
Tags :


















