வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் -சி.பி.எஸ்.இ 10- 12-வது வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன

by Admin / 01-03-2026 06:52:56pm
வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் -சி.பி.எஸ்.இ 10- 12-வது வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் சி.பி.எஸ்.இ பத்தாவது மற்றும் 12-வது வகுப்பு பொது தேர்வுகள் ஐக்கிய அரபு அமீரகம் ,சவுதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத், பக்ரைன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன .ஈரான் ,இஸ்ரேல் இடையேயான ராணுவ மோதல் மற்றும் வான்வழி போக்குவரத்து தடைகளால் மாணவர்களின் பாதுகாப்பை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என சி.பி.எ.ஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார் .மார்ச் 5-ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த தேர்வுகள் குறித்து மார்ச் 3-ஆம் தேதி நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு வாரியம் முடிவெடுக்கும் என்றும் மற்ற நாடுகளில் நடைபெறும் தேர்வுகள் எந்த மாற்றம் இன்றி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் -சி.பி.எஸ்.இ 10- 12-வது வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன
 
Tags :

Share via