வணிகப் பயன்பாட்டிற்கான19 கிலோ எடையுள்ள வர்த்தக எல்.பி.ஜி சிலிண்டர்களின் விலைகுறைவு
வணிகப் பயன்பாட்டிற்கான19 கிலோ எடையுள்ள வர்த்தக எல்.பி.ஜி சிலிண்டர்களின் விலையை கணிசமாகக் குறைத்துள்ளன. இந்த புதிய விலை குறைப்பு ஆகஸ்ட் 1, 2026 முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
புது தில்லி- ₹2,728
கொல்கத்தா- ₹2,872.50
சென்னை- ₹2,906
இந்த விலை குறைப்பு வர்த்தக சிலிண்டர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஐந்து கிலோ சிலிண்டர் புது தில்லியில் 5 கிலோ எடையுள்ள எல்பிஜி' சிலிண்டரின் விலையும் ₹13 குறைக்கப்பட்டு, தற்போது ₹808.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை குறைப்பின் மூலம் உணவகங்கள், ஹோட்டல்கள், டீக்கடைகள் நடத்துவோரின் தினசரி செலவுகள் கணிசமாகக் குறையும்.
Tags :


















